Saturday, December 23, 2006

பெரியார்-புரிந்துகொள்ளவும்

"தனக்கென்று மனிதன் ஏதாவது தேடிக்கொள்வதென்றால்,அது தான் இறந்த பின்னும் தன்னைப் பற்றி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கவும் புகழும்படியாகவும் ஏதாவது காரியம் செய்துவிட்டுப் போவது எனபது தான்." விடுதலை 10-9-1953.
"நான் எனக்குத் தோன்றிய, என்க்குச் சரியெனப் படுகின்ற கருத்துக்களை மறைக்காமல் அப்படியேசொல்லுகின்றேன்.இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம்.சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்.சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல" விடுதலை 15-7-1968.
ஒரு செல்வ மதவாதக் குடும்பத்தில் பிற்ந்து,பல மதத்தலைவர்களிடம் கேள்விகள் கேட்டு வள்ர்ந்தார்.காசிக்குச் சாமியாராக வேண்டும் என்று சென்று அங்கே நடக்கும் அநியாய்ங்களை நேரிலேக் கண்டு திரும்பினார்.பெரிய தொழிலதிபராகவும் முனிசிபல் சேர்மனாகவும் இருந்தார்.தமது நண்பர் ராஜாஜி சொன்ன்்தற்காக 29 பதவிகளைத் துறந்து காங்கிரசில் சேர்ந்து க் கடுமையாக உழைத்தார். தலைவராக்கப் பட்டார்.அங்கே சாதி வெறி தாண்டவமாடுவதைப் பார்த்து மாற்ற முய்ன்றார்.மகத்மா காந்தி போன்றோரே அதைத் தடுக்கத் தடையாக இருந்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
மனித நேயமே நல்ல கொள்கை என்பதைப் பல நாடுகட்குச் சென்று க்ண்டறிந்தார்.சாதி மதம் வேதம் புராணம் என்ற புரட்டுக்கள் கடைசியாக சாமி,கடவுளிடம் ஒளிந்து கொள்வதாலும்,கடவு்ளே மனிதனால் உண்டாக்கப் பட்டு பலரின் பொய் புரட்டுக்கு அடிமையாகி விட்டதாலும் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வ்ந்தவர்கள் வாருங்கள் என்று தனது கருத்துக்களை நேரே மக்களிடம் துணிவுடன் சொன்னார்.
இவர் கருத்துக்கள் அன்றும் இன்றும் வேண்டுமென்றே பத்திரிக்கை பலத்தால் இருட்டடிக்கப் பட்டன,திரித்துக் கூறப் பட்டன.
ஆகவே யானைப் பார்த்தக் குருடர்கள் போல்ப் பேசப்படுகிறார்.
மனிதர் முக்கியமாகப் பெண்கள் தங்கள் மூளைகட்குப் போடப்பட்ட விளங்குகளிலிருந்து வீடுதலை அடைந்து நல்ல மகிழ்வான வாழ்க்கை அனைவரும் சமமாக,பகுத்தறிவான முறையில் வாழ வேண்டும் என்பதே இவரது வேண்டுகோள்.
மூட நம்பிக்கைகளாள் பொருள் நேரம் வீணடிக்கப் படுகிறது என்றார்.
24-12-1973ல் உடலால் மறைந்தார்.கொள்கை மனிதநேயமாக வாழும்.
காட்டமான்க் கருத்துக்கள்-கண்ணியமாகச் சொன்னார்.நினைவு நாளில் பல நல்ல உள்ள்ங்கள் வாழ்த்தும்.